செய்திகள்

வாரிசு படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படம் பகிர்ந்த நடிகர் சரத்குமார்

19th Aug 2022 02:07 PM

ADVERTISEMENT

 

வாரிசு படப்பிடிப்புத் தளத்திலிருந்து நடிகர் சரத்குமார் புகைப்படம் பகிர்ந்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. 

இந்த நிலையில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து நடிகர் சரத்குமார் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தற்போது அவரது பதிவில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துவருகின்றனர். முன்னதாக வாரிசு படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  மீண்டும் சூர்யா - தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணி

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார். 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கில் பிரபலமான தயாரிப்பாளர். தெலுங்கு படங்களின் படிப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் வாரிசு தமிழ் படம் என தில் ராஜு தப்பித்துக்கொண்டார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT