செய்திகள்

மார்லன் பிராண்டோவின் கடிதம் - 50 ஆண்டுகளுக்கு பிறகு நடிகையிடம் மன்னிப்புக்கேட்ட ஆஸ்கர்

19th Aug 2022 12:40 PM

ADVERTISEMENT

 

நடிகை சாஷின் லிட்டில்ஃபெதரிடம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் குழு மன்னிப்புக்கேட்டுள்ளது. 

கடந்த 1973 ஆம் ஆண்டு காட்ஃபாதர் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது நடிகர் மார்லன் பிராண்டோவிற்கு அறிவிக்கப்பட்டது.  ஆனால் நடிகர் மார்லன் பிராண்டோ தனக்கு பதிலாகஅமெரிக்க பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த நடிகை சாஷின் லிட்டில் ஃபெதர் என்பவரை அனுப்பிவைத்தார். 

மேடையேறிய சாஷின், அமெரிக்க பூர்வ குடிகளை ஹாலிவுட் திரையுலகம் புறக்கணிப்பதாகவும் அதன் காரணமாக மார்லன் பிராண்டோ இந்த விருதை ஏற்க முடியாது எனக் கூறியதாகவும் அவரது கடிதத்தை வாசித்தார். 

ADVERTISEMENT

மேலும் ஹாலிவுட் திரையுலகம் தொடர்ச்சியாக அமெரிக்க பூர்வகுடிகளைத் தவறாக சித்திரிப்பதாகவும் தெரிவித்தார். இது அன்றைய காலகட்டத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நடிகை சாஷினுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

சாஷினுக்கு தற்போது 75 வயதாகிறது. இந்த நிலையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு சாஷின் அடைந்த இழப்புக்காக ஆஸ்கர் குழு அவரிடம் பகிரங்க மன்னிப்புகேட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT