செய்திகள்

ஹீரோயினாக அறிமுகமாகும் 'விஸ்வாசம்' பேபி அனிகா

18th Aug 2022 02:06 PM

ADVERTISEMENT

 

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமான பேபி அனிகா புதிய படமொன்றில் நாயகியாக நடிக்கவிருக்கிறார். 

என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் அனிகா. மலையாளத்தில் 5 சுந்தரிகள், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்திருந்தார். 

மேலும் 5 சுந்தரிகள் படத்துக்கு கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதைப் பெற்றார்.  விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக இவர் வரும் காட்சிகளும் கண்ணான கண்ணே பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களை கண்ணீர் மழையில் நனையச் செய்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க |  இளையராஜாவை விமர்சித்தவருக்கு சரியான பதிலடி கொடுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

இந்த நிலையில் முதன்முறையாக அனிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார். இந்தப் படத்தை ஆல்ஃப்ரெட் சாமுவேல் இயக்குகிறார். 

இந்தப் படத்தில் முகேஷ், விஜய ராகவன், லேனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஷான் ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT