செய்திகள்

''மன்னிக்கவே மாட்டேன்'' - 'விருமன்' விடியோ பாடலை வெளியிட்டு கார்த்தி பதிவு

18th Aug 2022 11:48 AM

ADVERTISEMENT

 

விருமன் பட வானம் கிடுகிடுங்க விடியோ பாடலை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் கடந்த 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் குடும்ப பார்வையாளர்களை இந்தப்  படம் பெரிதும் ஈர்த்துள்ளதாக தெரிகிறது. 

சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கொண்டாடினர். இந்தப் படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு யுவனின் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து வானம் கிடுகிடுக்க என்ற விடியோ பாடலை நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

பாடல் குறித்து கார்த்தி எழுதியுள்ள பதிவில், '' நடுராத்திரி மூனு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி மாஸ்டர், மன்னிக்கமாட்டேன், இதற்கு முன் இப்படி செய்ததில்லை. யுவன், இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT