செய்திகள்

ஏன் பாலிவுட் படங்கள் தோல்வியடைகின்றன?: நடிகர் மாதவன் பதில்

18th Aug 2022 04:16 PM

ADVERTISEMENT

 

பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.

சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அமீர்கான் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘லால் சிங் சத்தா’  இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகியும் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது.

அதேபோல் ரன்வீர் சிங்கின் ‘சம்ஷோரா’, அக்‌ஷய் குமாரின் ‘ரக்‌ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்களும் படுதோல்விப்படமாக அமைந்தன.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நடிகர் விஜய்யின் 'தளபதி 67' - லோகேஷ் செய்த பெரிய மாற்றம்

இந்நிலையில் , நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக உள்ள ‘தோகா: ரவுண்ட் டி கார்னர்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாதவனிடம் ‘பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்’? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு மாதவன், ’சினிமாவில் அனைத்து நடிகர்களும் முழுமையான உழைப்பைச் செலுத்துகின்றனர். எதனால் திரைப்படம் தோல்வியடைகிறது எனத் தெரிந்தால் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும்.  கரோனாவிற்குப் பின்பு உலகளவிலான படங்களையும் ரசிகர்கள் பார்க்கத் துவங்கிவிட்டதால் அவர்களின் ரசனையும் மாறிவிட்டது. தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் ஆகிய படங்கள்தான் இங்கு வெற்றி பெற்றவை. இந்த நிலைமை நிரந்தரம் அல்ல. நல்ல திரைப்படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கம் வருவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT