செய்திகள்

பிரசாந்த் நீல் , பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

16th Aug 2022 06:41 PM

ADVERTISEMENT

 

நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இயக்குநர் பிரஷாந்த் நீல். இவரது இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ.1,200 கோடி வசூலையும் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ’சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். 

ADVERTISEMENT

இந்நிலையில், ‘சலார்’ 2023 - செப்டம்பர் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஹொம்பலே ஃபிலிம்ஸ்’ அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT