செய்திகள்

விஜய் ஆண்டனியின் ‘கொலை’: டிரைலர் வெளியானது 

15th Aug 2022 07:32 PM

ADVERTISEMENT

 

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடித்துள்ள ‘கொலை’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

விஜய் ஆண்டனி அதிகளவில் திரில்லர் பாணி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது அவர் நடித்துள்ள படம் கொலை. பாலாஜி கே குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் ரித்திகா சிங், ராதிகா, மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை செய்தது யார் என்ற கோணத்தில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT