செய்திகள்

தளபதி 67 - பிரபல இயக்குநருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள லோகேஷ் - வைரலாகும் படம்

15th Aug 2022 12:39 PM

ADVERTISEMENT

 

தளபதி 67 படத்துக்காக பிரபல இயக்குநருடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்த விக்ரம் படம் சுமார் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் படம் குறித்து பல்வேறு விவாத நிகழ்ச்சிகளில் லோகேஷ் கலந்துகொண்டார். 

சமீபத்தில் அடுத்தப் பட பணிகளில் இருப்பதாகவும் அதன் காரணமாக சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தின் கதை விவாதங்களில் லோகேஷ் ஈடுபட்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக இயக்குநர் ரத்ன குமார் லோகேஷுடன் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து தளபதி 67 கதை விவாதத்தில் ரத்னகுமாரும் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. முன்னதாக மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கு ரத்னகுமார் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரத்னகுமார் இயக்கிய குலுகுல திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT