செய்திகள்

என்னது மிஷ்கின் கையால் இயக்குநர் மோகன் ஜிக்கு விருதா ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

15th Aug 2022 01:20 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் மோகன் ஜிக்கு மிஷ்கின் விருதளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் மூலம் சர்ச்சைகளில் சிக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி வெறுப்பு என இவரது படங்களுக்கு எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. 

தற்போது இயக்குநர் செல்வராகவன், நட்டி நடராஜன் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்

இந்த நிலையில் வி4 அவார்ட்ஸ் மோகன்ஜிக்கு ருத்ர தாண்டவம் படத்துக்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது வழங்கியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் கையால் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தனர். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT