செய்திகள்

ரஜினியைத் தொடர்ந்து விஜய் வீட்டிலும் பறக்கும் தேசியக் கொடி!

13th Aug 2022 04:50 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய் வீட்டில் ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் சனிக்கிழமை(ஆகஸ்ட் 13) முதல் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். 

ADVERTISEMENT

இதனயைடுத்து மக்கள் தேசியக் கொடியைத் தங்கள் வீடுகளில் ஏற்றிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ரஜினிகாந்த தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். 

தேசியக் கொடியை ஏற்றும் மோகன்லால்

மேலும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி, நாம் இந்தியனென்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.  நடிகர் மோகன்லாலும் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். 

விஜய் வீட்டில் தேசியக் கொடி

இந்த நிலையில் நடிகர் விஜய் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT