10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் திரைப்படம் ஒன்றை இயக்கிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி சின்மயி நாயர். இவர் தற்போது கிளாஸ் என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கிவருகிறாராம். இந்தப் படத்தில் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை சபு குருவிலா மற்றும் பிரகாஷ் குருவிலா தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு பென்னி ஜோசஃப் ஒளிப்பதிவு செய்ய மனு ஷஜு படத்தொகுப்பு செய்கிறார். எஸ்.ஆர்.சுராஜ் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க | சூர்யா - கார்த்தியின் 'விருமன்' படம் எப்படி இருக்கிறது ? - விமர்சனம்
இந்தப் படத்துக்கு அனில் ராஜ் கதை எழுத, விஜய் யேசுதாஸுடன் சுதீர், மீனாட்சி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.