நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் தடைபட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. இந்தப் படத்தில் நடித்துவந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் யாரும் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டனர்.
இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக நவரச நாயகன் கார்த்திக்கும் நெடுமுடி வேணுவிற்கு பதிலாக நந்து பொதுவலும் நடிப்பது உறுதியாகியுள்ளது.
திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டதால் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தியன் 2 வில் நடிப்பதை காஜல் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிக்க | ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?
இந்த நிலையில் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். கமல்ஹாசன் நாயகனாக நடித்த காக்கி சட்டை, விக்ரம் படங்களில் சத்யராஜ் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் கமலுடன் சத்யராஜ் இணையவிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிபெற்றதன் காரணமாக இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்குவது எளிதாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.