செய்திகள்

கைதி - 2 எப்போது? வெளியான புதிய தகவல்

10th Aug 2022 11:55 AM

ADVERTISEMENT

 

'கைதி' இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு  வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கைதி. 

சிறையிலிருந்து வெளிவரும் தில்லி, போதைப்பொருள் கடத்தல் கும்பலால் எதிர்கொள்ளும் பிரச்னையை மையமாக வைத்து அப்படம் உருவாகியிருந்தது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பின், கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்திலும் கைதி படத்தின் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்ததால் இரண்டு படத்திற்கும் தொடர்புள்ளபடி இயக்கநர் லோகேஷ் கனகராஜ் கதை அமைத்திருந்தார்.

இந்நிலையில், கைதி - 2 எப்போது துவங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஆண்டு துவங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் நடிகர் விஜயின் புதிய படத்தை இயக்குவதால் அப்படத்தின் பணிகள்  முடிந்ததும் கைதியின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT