செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பாடிய சிவகார்த்திகேயனின் மகள்! 

9th Aug 2022 09:17 PM

ADVERTISEMENT

 

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள்  ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினார். 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். மாமல்லபுரத்தில் இருந்து 69 குளிர்சாதன பேருந்துகளில் வீரர், வீராங்கனைகள் நடுவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் 12 நாள்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடர் நிறைவு விழாவுடன் வருகிறது. 

ADVERTISEMENT

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT