செய்திகள்

பிசாசு 2-ல் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்: மிஷ்கின் விளக்கம்

9th Aug 2022 04:42 PM

ADVERTISEMENT

 

பிசாசு 2 திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளை  மிஷ்கின் நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு  வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

இதையும் படிக்க | மாமனிதன்: சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

ADVERTISEMENT

பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்-1 ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.

 

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் - 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'பிசாசு 2' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முன்னதாக,  அப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒருகாட்சியில் 15 நிமிடம் நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குநர் மிஷ்கின் கூறியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன், இதுகுறித்து மிஷ்கினிடம் கேள்வியெழுப்பியபோது ‘நிர்வாணத்தை அனைவரும் கலையாக பார்க்கமாட்டார்கள். சிலருக்கு அது பாலியல் வக்கிரம் என்பதால் படத்தில் வைக்கலாமா வேண்டாமா என யோசித்து வருகிறேன்’எனத் தெரிவித்தார். 

ஆனால், தற்போது இப்படம் குழந்தைகளுடன் காணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் நிர்வாணக் காட்சிகளை  படக்குழு நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிசாசு 2-ல் நிர்வாணக் காட்சிகளில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா அதிகமான சம்பளத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT