செய்திகள்

பாரதி கண்ணம்மா தொடர் முடியப் போகிறதா? வைரலாகும் ப்ரமோ!

DIN

விஜய் டி.வி.யில் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் முடியப் போகிறதா?

தொலைக்காட்சித் தொடர்களில்  அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களைக் காத்திருக்க வைக்கும் மிகச் சில தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

தற்போது சென்றுகொண்டிருக்கும் கதையின் போக்கிலேயே சென்றால்கூட இன்னும் சில ஆண்டுகளுக்குக்கூட இந்தத் தொடரை விறுவிறுப்பு குறையாமல் வளர்த்துச் செல்ல முடியும்.

தொடரும் அப்படிதான் சென்றுகொண்டிருக்கிறது.

தனக்கு இரண்டாவதாகவும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கும் கண்ணம்மா, இன்னொரு குழந்தை பற்றிய தகவலை அறிந்துகொள்வதற்காக வெண்பாவின் வலையில் விழ நேரிடுகிறது.

பாரதிக்குத் தெரியாமல் கண்ணம்மா வீட்டுக்குச் சென்று அவர் இல்லாத நேரத்தில் லட்சுமிக்குச் சமையல் எல்லாம் செய்துபோட்டுவிட்டு வந்த சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் எக்குத்தப்பாக பாரதியிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறாக கதையின் போக்கில் அடுத்தடுத்த முடிச்சுகள் உருவாகிக் கொண்டிருக்க, திடீரென தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில் ஆல் ஆஃப் ஏ சடன், பாரதிக்கு ஞானோதயம் பிறப்பதாகவும் கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகப் பெற்றோரிடம் கூறுவதாகவும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

ப்ரமோவிலுள்ளவாறு கதை நகர்ந்தால் இன்னும் சில வாரங்களில் பாரதி கண்ணம்மா முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அதிர்ச்சி பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அல்லது இப்படியே நீட்டித்துக் கொண்டிருந்தால் ரப்பராகிவிடக்கூடும் என அஞ்சி, மறுபடியும்  புதிய முடிச்சுகளை உருவாக்கத் திட்டமிட்டுக் கதை நகர்த்துகிறார்களா என்பதும் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் இந்த வாரம் தொடரைத் தூக்கி நிறுத்துவதில் இந்த ப்ரமோ பெரும் பங்காற்றும் என்பதில் மட்டும் எவ்வித மாற்றமுமில்லை.

பார்க்கலாம், அடுத்தது என்னவென்று?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT