செய்திகள்

ஆர்யா - விஷால் இணைந்து நடித்துள்ள 'எனிமி' டிரெய்லர் இதோ

23rd Oct 2021 06:21 PM

ADVERTISEMENT

 

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள எனிமி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள படமான  எனிமி தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களுக்குப் பிறகு ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைக்க, சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | 'சிலர் நடிகர் விஜய்யை, ஜோசஃப் விஜய்யாக மாற்றி விட்டார்கள்' : பிரபல இயக்குநர் அதிரடி தகவல்

இந்தப் படத்தில் ஆர்யா, விஷால், பிரகாஷ் ராஜ், மிருனாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், தம்பி ராமையா, கருணாகரன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Tags : arya Thaman Vishal Enemy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT