செய்திகள்

கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் பாலாஜி !

22nd Oct 2021 07:52 PM

ADVERTISEMENT

 

லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படத்தில் பிக்பாஸ் பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். 

மாடலான பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் ஆரியுடன் மோதல், ஷிவானியுடன் நெருக்கமாக பழகிய விதம் என மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். 

கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி முதல் இடத்தையும் பாலாஜி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இதனையடுத்து அவருக்கு ஆதரவு பெருகியது. அப்போதே அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ‘பாதிக்கப்பட்டவங்க யாரா இருந்தாலும் நீதி கிடைக்கனும்’: ‘ஜெய் பீம்’ டிரைலர் வெளியீடு

இந்த நிலையில், லிப்ரா புரொடக்சன் சார்பாக ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படத்தில் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து பாலாஜி வெளியிட்டுள்ள விடியோவில்,  பாலாஜி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அதற்கு ரவிந்தர் வாழ்த்து தெரிவிக்கிறார். 

இந்த விடியோவை பகிரும் ரவீந்தர், எங்களது அடுத்த படத்தில் பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரை வாழ்த்துங்கள். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் இந்தப் படத்தில் பணிபுரியவிருக்கிறார்கள். ஒரு நடிகராக உங்கள் அனைவரையும் அவர் மகிழ்விப்பார். என்று தெரிவித்தார். 

Tags : Lybra Productions Ravindar Balaji Murugadoss Bigg Boss
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT