நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பள்ளி மாணவனாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9 தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகும் ஒரு சில திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இதையும் படிக்க | ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பிரபல தமிழ் படம் : உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்தப் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எஸ்கே புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, குக் வித் கோமாளி சிவாங்கி, சூரி, பால சரவணன், முனஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவனாக நடித்துள்ளாராம். அவருடன் பிரியங்கா அருள் மோகனும் பள்ளி மாணவியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.