செய்திகள்

பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகுகிறாரா கதாநாயகி ரோஷினி ?

21st Oct 2021 09:19 PM

ADVERTISEMENT

 

பாரதி கண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி அந்தத் தொடரில் இருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் மிக முக்கியமானது. வார வாரம் திடீர் திருப்பங்கள் மற்றும் சுவாரசியமான காட்சிகளால் இந்தத் தொடருக்கென இருக்கும் ரசிகர்கள் எப்பொழுதும் குறைவதே இல்லை. 

இதையும் படிக்க | ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கரின் ஓ மணப்பெண்ணே ! - திரைப்பட விமர்சனம்

தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி அந்தத் தொடரில் இருந்து விலகுகிறாராம். 

ADVERTISEMENT

மேலும் ரோஷினி இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே கண்ணம்மாவாக நடிப்பார் எனவும் அதன் பிறகு வேறு ஒரு நடிகை கண்ணம்மாவாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் எதனால் அவர் விலகுகிறார், அந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை ஆகியவைப் பற்றி இனி வரும் வாரங்களில் தெரிந்துவிடும். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT