செய்திகள்

பாவனியுடனான காதல் சர்ச்சை: இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அபினயின் மனைவி: 'நீ யாருனு தெரியும்'

30th Nov 2021 02:31 PM

ADVERTISEMENT

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் - சாவித்ரியின் பேரன் அபினய் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ராமானுஜர் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பாவனியை நேசிப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அபினயிடமே நேரடியாக பாவனி கேட்டார். அதற்கு தோழியாக மட்டுமே கருதுவதாக தெரிவித்தார். இதனையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் போட்டி ஒன்றின் போது ராஜு அபினயிடம், பாவனியை நேசிக்கிறாயா எனக் கேட்க அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அபினய் பாவனி மீது கூடுதல் கவனம் செலுத்துவது ரசிகர்களிடையே சந்தேகத்தை வலுப்பெற செய்துள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ''என் தம்பி சிலம்பரசன்...'': 'மாநாடு' படத்தை விமர்சித்த சீமான்

இந்த நிலையில் அபினயின் மனைவி அபர்னா, அபினய் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்டத்தை பகிர்ந்து, 'நீ யார் என்பது எனக்கு தெரியும். என்னைப் போல யாரும் உன்னை புரிந்துகொள்ள முடியாது. எப்பொழுதும் போல நான் உன்னை நேசிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். 


 

Tags : Abhinay Bigg Boss Pavni Reddy Raju Vijay TV
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT