செய்திகள்

சென்னையில் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்யும் மன்சூர் அலிகான்: வைரலாகும் விடியோ

27th Nov 2021 04:45 PM

ADVERTISEMENT

 

கடந்த 2 வாரங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கனமழை பெய்து, சென்னையே வெள்ளக்காடானது. அதில் இருந்து மெல்ல மீண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் சென்னையில் மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. மழையால் முக்கிய பகுதிகளில் வெள்ளத்தால் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் இயல்பு வாழ்க்கைக் கடுமையாக பதாகிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் சிரமப்பட்டு வரும் இவ்வேளையில் நடிகர் மன்சூர் அலிகான் மகிழ்ச்சியாக படகு சவாரி செய்யும் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விடியோ எப்பொது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் இல்லை. 

ADVERTISEMENT

Tags : Mansoor Ali Khan Chennai Rain Rain Actor boat
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT