செய்திகள்

போஸ்டரால் உருவான சர்ச்சை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதிய கௌதம் மேனன்

5th Nov 2021 03:26 PM

ADVERTISEMENT

 

கடந்த இரு நாட்களுக்கு முன் இயக்குநர் கௌதம் மேனன் கதாநாயகனாக நடிக்கும் 'அன்புசெல்வன்' என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். 

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த இயக்குநர் கௌதம் மேனன், ''எனக்கு இந்தப் படம் குறித்து எதுவும் தெரியாது என்றும், போஸ்டரில் குறிப்பிடபட்டிருக்கும் இயக்குநரை தான் சந்தித்தது கூட இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து தான் பகிர்ந்த முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் நீக்கினார். 

இதையும் படிக்க | 'ஆரம்பிக்கலாங்களா?': கமல்ஹாசனின் 'விக்ரம்' பட இசை குறித்து வெளியான தகவல்

ADVERTISEMENT

இதனையடுத்து அன்பு செல்வன் படத்தில் கௌதம் மேனன் நடித்ததாக படமாக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கௌதம் மேனன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''நான் கடந்த 2018 ஆம் ஆண்டு 'வினா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஜெய் கணேஷ் இயக்கினார்.

ஆனால் அந்தப் படம் தொடர்ந்து நடைபெறவில்லை. தற்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் மீண்டும் அந்தப் படத்தை வேறு இயக்குநரை வைத்து துவங்க அனுமதி கேட்டார். ஆனால் எனக்கு இயக்குநர் ஜெய் கணேஷுடன் பணியாற்றவே விருப்பம் என்று கூறி மறுத்தேன்'' என்று விளக்கமளித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT