செய்திகள்

சூர்யா படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்: இயக்குநர் பாண்டிராஜ்

26th May 2021 04:39 PM

ADVERTISEMENT

 

என்னுடைய இயக்கத்தில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம். பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - ரத்னவேலு. 

ADVERTISEMENT

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் போல இதுவும் வலுவான குடும்பக் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. 

இந்தப் படம் பற்றி சமூகவலைத்தள உரையாடல் ஒன்றில் இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது:

கார்த்தியின் ரசிகர்கள் எப்படி கடைக்குட்டி சிங்கம் படத்தை ரசித்தார்களோ, அதேபோல நான் இயக்கும் அடுத்த படத்தை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி வருகிறோம். இதுவரை படம் நன்றாக வந்துள்ளது. இதற்கு மேல் படத்தைப் பற்றி என்னால் கூற முடியாது என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT