செய்திகள்

இவரை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை: நடிகர் சிம்பு வேதனை

15th May 2021 07:14 PM

ADVERTISEMENT

 


குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என்று நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

எஸ்டிஆர் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அகில இந்திய மாநிலச் செயலாளர் குட்லக் சதீஷ் கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். குட்லக் சதீஷின் மறைவுக்கு நடிகர் சிம்பு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் சிம்பு கூறியதாவது:

ADVERTISEMENT

அன்புத் தம்பியும் காதல் அழிவதில்லை படத்திலிருந்து என்னோடு கூட இருந்து வரும் சகோதரனுமான குட்லக் சதீஷை அகாலத்தில் இழந்திருக்கிறேன்.

உன்னை இழந்துவிட்டதை நம்பமுடியாமல் தவிக்கிறேன். உன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாது தவிக்கிறேன்.

நீ செய்த எல்லா உதவிகளுக்கும் நன்றி. அவசரப்பட்டு விட்டாய். போய் வா சகோதரா. அழுகையோடு வழியனுப்பி வைக்கிறேன். 

சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல இன்னொருவரை இழக்க விரும்பவில்லை என்றார். 

Tags : SImbu சிம்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT