செய்திகள்

நடிகர் அஜித்துக்கு ஓ. பன்னீர்செல்வம் பாராட்டு

DIN

துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்குத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பைக் ரேஸ், கார் ரேஸில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் அதிக விருப்பம் கொண்டவா் அஜித். எழும்பூரில் உள்ள ரைபிள் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளாா். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் ரைபிள் கிளப்புக்குச் சென்று பயிற்சியில் ஈடுபடுவார்.

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2 முதல் 7 வரை நடைபெற்றது. ரைபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இப்போட்டிகளை நடத்தினார். 

சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினரான அஜித், தனது அணியினருடன் இணைந்து 4 தங்கம் உள்பட 6 பதக்கங்களை வென்றுள்ளார். ஏர் பிஸ்டல் 10 மீ., சென்டர் ஃபயர் பிஸ்டல் (என்.ஆர்.) 25 மீ., ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீ., ஃப்ரீ பிஸ்டல் 50 மீ. ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களும் சென்டர் ஃபயர் பிஸ்டல் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீ., ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (என்.ஆர்) 25 மீ. ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கத்தையும் அஜித் அணி வென்றுள்ளது. சென்னை ரைபிள் கிளப் சார்பாகப் பங்கேற்ற அஜித் அணியில் சித்தார்த் சிவகுமார், ஜெகன்நாதன், சுமீத் ஹர்கிசண்டாஸ் சங்கவி, விஜய் குமார், வருண் மது, எஸ். சுதாகர் போன்றோர் இருந்தார்கள். இப்போட்டியில் 900 பேர் கலந்துகொண்டார்கள்.  

இந்நிலையில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்ற நடிகர் அஜித்துக்குத் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறையில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் அஜித் குமார், சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT