செய்திகள்

ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ள ஆர்ஜே பாலாஜி!

2nd Mar 2021 01:08 PM

ADVERTISEMENT

 

மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்க முடிவெடுத்துள்ளார்.

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்த படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கினார்கள். டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 14 அன்று மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக பதாய் ஹோ என்கிற ஹிந்தி படத்தின் ரீமேக்கை என்ஜே சரவணனுடன் இணைந்து இயக்குகிறார் ஆர்ஜே பாலாஜி. 2018-ல் வெளியான பதாய் ஹோ படத்தில் ஆயுஷ்மண் குர்ரானா, நீனா குப்தா நடித்தார்கள். இயக்கம் - அமித் ரவீந்திரநாத் சர்மா. வசூல் ரீதியில் அசத்தியதோடு, இரு தேசிய விருதுகளையும் இப்படம் பெற்றது. 25 வயது கதாநாயகனின் அம்மா திடீரென ஒருநாள் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவார். வயதாகிவிட்டாலும் கருவை அழிக்கக்கூடாது என வயதான தம்பதியினர் குழந்தை பிறப்பதை எதிர்பார்ப்பார்கள். இதை அவர்களுடைய இரு மகன்களும் குடும்பத்தினரும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. 

ADVERTISEMENT

ஆயுஷ்மண் குர்ரானா வேடத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கவுள்ளார். படத்தின் சில காட்சிகள் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றப்படுகின்றன. படத்துக்கு வீட்ல விசேஷங்க எனத் தலைப்பு வைத்துள்ளதாகவும் சத்யராஜ் நடிப்பதாகவும் வெளியான செய்திகள் உண்மையில்லை என பாலாஜி மறுத்துள்ளார். ஏப்ரல், மே மாதத்தில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

Tags : RJ Balaji Badhaai Ho
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT