செய்திகள்

நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள ஏலே படம்!

2nd Mar 2021 03:13 PM

ADVERTISEMENT

 

பூவரசம் பீப்பி என்கிற படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக சில்லுக் கருப்பட்டி என்கிற படத்தை இயக்கி அதிக கவனம் பெற்றார்.

ஹலிதா தற்போது இயக்கியுள்ள படம் - ஏலே. இப்படத்தின் படப்பிடிப்பு பழனியில் 2019-ம் ஆண்டு மே 3 அன்று தொடங்கியது. 

இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்கள். வால்வாட்சர் மற்றும் வொய்நாட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஏலே படத்தைத் தயாரித்துள்ளார்கள்.  

ADVERTISEMENT

சமுத்திரக்கனி, மணிகண்டன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - அருள்தேவ். பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியான 16 நாள்களில் ஓடிடியிலும் வெளியானது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 30 நாள்களுக்குப் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியான 50 நாள்களுக்குப் பிறகும் தான் ஓடிடிடியில் வெளியாக வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கடிதம் அளிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

இதனால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள ஏலே படம் திரையரங்குகளில் வெளியாகாமல் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாகக் கடந்த ஞாயிறு (பிப். 28) அன்று வெளியானது. 

இந்நிலையில் ஏலே படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவிருப்பதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Aelay Netflix
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT