செய்திகள்

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்பட ஸ்னீக் பீக் வெளியீடு!

1st Mar 2021 07:51 PM

ADVERTISEMENT

 

சென்னை: இயக்குநர் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்பட ஸ்னீக் பீக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் 'நெஞ்சம் மறப்பதில்லை'. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு முதலில் வெளியான சமயம் நல்ல வரவேற்பு இருந்தது. அதேபோல், முதல்தடவையாக ட்ரைலர் வெளியான போதும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றது.

ADVERTISEMENT

ஆனால் பல்வேறு காரணங்களினால் திரைப்படம் உடனடியாக வெளியாகவில்லை. அதற்குள் அப்படத்திற்கு மேலும் இரண்டு ட்ரைலர்கள் வெளியானது. தற்போது சிக்கல்கள் எல்லாம் தீர்ந்து படம் வரும் 5-ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்பட ஸ்னீக் பீக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தக் காட்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசும் ‘டேய்..சும்மா இரேண்டா’ என்னும் வசனம் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT