செய்திகள்

'இது என்ன பரம்பரையாக இருக்கும் ? முரட்டுத்தனமான பயிற்சி' - பிரபல நடிகை பகிர்ந்த விடியோ

30th Jul 2021 12:24 PM

ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியாளரை உற்சாகப்படுத்த பயிற்சியாளர் அவரது கண்ணத்தில் அறைவிடும் விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

'சார்பட்டா பரம்பரை' படம் அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் 1970களின் பிற்பகுதியில் சென்னையில் குத்துச்சண்டை விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

இதையும் படிக்க| வதந்திக்கு விடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஷகீலா 

வழி வழியாக குத்துச்சண்டை விளையாட்டைத் தொடருபவர்களைப் பரம்பரை அழைப்பார்கள். இந்தப் படத்தில் சார்ப்பட்டா பரம்பரையைச் சேர்ந்தவராக வரும் ஆர்யா குத்துச்சண்டைப் போட்டியில் வென்று எப்படித் தன் பரம்பரைக் கௌரவத்தை நிலைநாட்டுகிறார் என்பதே படத்தின் கதை. 

ADVERTISEMENT

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கும் அவரது பயிற்சியாளரான பசுபதிக்குமான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா தனது சுட்டுரைப் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க | ஹிந்திக்கு செல்லும் நடிகர் அருண் விஜய்யின் தமிழ் படம் 

அதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் போட்டியாளரை உற்சாகப்படுத்தும் விதமாக அவரது கன்னத்தில் அறை விடுகிறார். இந்த விடியோவிற்கு முரட்டுத்தனமான பரம்பரையாக இருக்கும் போலேயே என நடிகை ஷர்மிளா கருத்து தெரிவித்துள்ளார். இந்த விடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags : Sarpatta Parambarai Arya Pa Ranjith olympic Tokyo
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT