செய்திகள்

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிக்பாஸ் சாண்டி - வெளியான விடியோ

23rd Jul 2021 04:04 PM

ADVERTISEMENT

தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை பிக்பாஸ் புகழ் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார்.

'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாண்டி, அதன் பிறகு தமிழில் முன்னணி நடன இயக்குநராக பல்வேறு படங்களில் பணிபுரிந்து வருகிறார்.  நடிகர் ரஜினிகாந்த்தின் 'கபாலி', 'காலா', 'சங்கத் தமிழன்' போன்ற பல படங்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், அங்கே தனக்கே உரிய பாணியில் அனைவரையும் கலகலப்பாக்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் 'பிகில்' ரெபா இணைந்து நடனமாடிய 'குட்டி பட்டாஸ்' என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். இந்த பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

சாண்டி தற்போது '3:33' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நம்பிக்கை சந்துரு இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

நடன இயக்குநர் சாண்டி, டோரோத்தி சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று(வியாழக்கிழமை) தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : instagram Bigg Boss Sandy baby
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT