செய்திகள்

காதலியை மணந்தார் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் (படங்கள்)

25th Jan 2021 01:02 PM

ADVERTISEMENT

 

ஃபேஷன் டிசைனர் நடாஷாவைப் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் திருமணம் செய்துகொண்டுள்ளார். 

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவர் வருண் தவான். போர்ப்ஸின் புகழ்பெற்ற 100 இந்தியர்கள் பட்டியலில் 2014 முதல் இடம்பெற்று வருகிறார். இயக்குநர் டேவிட் தவானின் மகனான வருண் தவான், 2012-ல் வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் நடிகராக அறிமுகமானார். ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக 11 வெற்றிப் படங்களை அளித்த நடிகர் என்கிற பெயரைப் பெற்று பாலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ளார். 

பள்ளித் தோழி நடாஷாவை நீண்ட காலமாகக் காதலித்து வந்த வருண் தவான், 2019-ல் தனது காதலியை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். 

ADVERTISEMENT

இந்நிலையில் நடாஷா தலாலைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் வருண் தவான். மஹாராஷ்டிரத்தின் அலிபாக்கில் உள்ள மேன்ஷன் ஹவுஸில் வருண் தவான் - நடாஷா திருமணம் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT