செய்திகள்

வீட்டில் குடித்து விட்டு ரகளை என புகார்: நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

24th Jan 2021 04:26 PM

ADVERTISEMENT

 

சென்னை: தங்கியிருக்கும் வீட்டில் குடித்து விட்டு ரகளை என காவல் துறையில் தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால்.

தற்போது கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

ADVERTISEMENT

விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவு சத்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு விஷ்ணு விஷால் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அவர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் காவல் துறை கூடுதல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஷ்ணு விஷாலின் இதுமாதிரியான செயல்கள் மற்றவர்களுக்கு தொந்தரவு அளிப்பதாகவும்,  நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் விஷ்ணு விஷால் வீட்டிற்கு வந்து செல்வதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘படப்பிடிப்பிற்காக சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் இரண்டு மாதங்களுக்கு மேலாக நான் குடிக்கவில்லை. நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. வேறு ஏதோ காரணங்களினால் இப்படியொரு பொய்யான குற்றச்சாட்டை என் மீது குடியிருப்புவாசிகள் சுமத்தியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக மனைவியின் விவாகரத்து மற்றும் பல்வேறு நிதிச் சிக்கல்களின் காரணமாக போதைக்கு அடிமையாகி மீண்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT