செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அன்பறிவு: படப்பிடிப்பு தொடக்கம்! (விடியோ)

21st Jan 2021 04:43 PM

ADVERTISEMENT

 

மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் என மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரபல இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா.

அவர் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் அன்பறிவு. முதல்முறையாகக் கிராமத்து இளைஞன் வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கிறார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்குகிறார். நெப்போலியன், விதார்த், காஷ்மிரா, சங்கீதா கிரிஷ், சாய்குமார், ஊர்வசி போன்றோர் நடிக்கிறார்கள். அஸ்வின் ராம், பிரபல இயக்குநர் அட்லியிடம் பணிபுரிந்துள்ளார். இசை - ஹிப்ஹாப் தமிழா. 

ADVERTISEMENT

அன்பறிவு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பான விடியோவை வெளியிட்டுள்ளது. 

Tags : Anbarivu Hiphop Adhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT