செய்திகள்

மெளனப் படம்: புதிய சவாலை எதிர்கொள்ளும் விஜய் சேதுபதி

16th Jan 2021 04:04 PM

ADVERTISEMENT

 

கடந்த 10 வருடங்களாக வெவ்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது புதிய சவாலுக்குத் தயாராகியுள்ளார்.

பாலிவுட்டில் நுழைந்துள்ள விஜய் சேதுபதி, மெளனப் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தில் நடிக்கவுள்ளதாக விஜய் சேதுபதி இன்று அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சில நேரங்களில் மெளனம் மிகவும் சத்தமாக இருக்கும். என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய புதிய படத்தின் போஸ்டரை வெளியிடுகிறேன். காந்தி டாக்ஸ் என்கிற மெளனப் படத்தினால் புதிய சவாலுக்கும் புதிய தொடக்கத்துக்கும் தயாராகியுள்ளேன். உங்களுடைய அன்பும் வாழ்த்துகளும் எனக்குத் தேவை என்று கூறியுள்ளார். 

காந்தி டாக்ஸ் படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கவுள்ளார். இதற்கு முன்பு சில மராத்தி படங்களை கிஷோர் இயக்கியுள்ளார். 

ஹிந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளது.

Tags : Vijay Sethupathi Gandhi Talks
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT