செய்திகள்

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் இளையராஜா

3rd Jan 2021 05:08 PM

ADVERTISEMENT

 

சென்னை: பிரபல இயக்குநருடன் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் திலகம் கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்து பின்னர்  கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வஸந்த்.இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  

அந்தப்படத்தி வெற்றிக்குப் பிறகு ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினார்.

ADVERTISEMENT

தற்போது அவர் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வசந்த்துடன் இணைந்து பணியாற்ற உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது புதிய படம் ஒன்றைத் தானே தயாரித்து  இயக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் வஸந்த் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ‘கேளடி கண்மணி’ வெற்றிப் படத்திற்கு அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT