செய்திகள்

ஆஸ்கர் பட்டியலில் 'கூழாங்கல்' : விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

7th Dec 2021 03:15 PM

ADVERTISEMENT

 

பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூழாங்கல் திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரௌடி பிக்சர்ஸ் சார்பாக வெளியிடுகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்களுக்கான வெளிநாட்டு படங்கள் பட்டியலில் கூழாங்கல் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்து விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | 'கேஜிஎஃப் 2' படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குநர்

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் இருந்து இறுதியாக 15 படங்கள் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கன அறிவிப்பு வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Koozhangal PS Vinoth Raj Vignesh Shivan Nayanthara Oscar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT