செய்திகள்

'கேஜிஎஃப் 2' படத்தின் முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குநர்

7th Dec 2021 01:27 PM

ADVERTISEMENT

 

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படமான 'கேஜிஎஃப்' இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி வைரலாகின. 

இந்தப் படத்தின் வசனங்களும் மிகப் பிரபலம். இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கரோனா பரவல் காரணமாக இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | வேட்டை தொடருமா ? துப்பாக்கியுடன் கிளம்பிய சிம்பு: வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகம்

இந்த நிலையில் இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். அவர் ஆதிரா என்ற வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது வேடத்துக்கு டப்பிங் செய்துள்ளார். அப்போது சஞ்சய் தத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் வெளியிட்டுள்ளார். 

Tags : KGF 2 Yash Prashant Neel Sanjay Dutt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT