செய்திகள்

மோகன்.ஜியின் அடுத்தப் பட ஹீரோவாகும் செல்வராகவன்: ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு

4th Dec 2021 07:21 PM

ADVERTISEMENT

 

'ருத்ர தாண்டவம்' படத்துக்கு பிறகு இயக்குநர் மோகன்.ஜி இயக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயக்குநர் மோகன்.ஜி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலான ரசிகர்கள் மோகன்.ஜியில் பதிவில் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க | மீண்டும் சினிமாவில் விஜயகாந்த்? அதுவும் இந்த ஹீரோ படத்திலா? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்

ADVERTISEMENT

திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு முடங்களும் சாதி, மத ரீதியான விஷயங்கள் குறித்து பேசியது. இந்த இரண்டு படங்களும் பிற்போக்குத்தனமான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

முன்னதாக சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இயக்குநர் செல்வராகவன், விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதில் பீஸ்ட் படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Tags : Mohan G Rudra Thandavam Selvaraghavan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT