தமிழ் திரைப்படங்களில் வெளி மாநில பெண்களை நடிக்க வைத்துக்கொண்டிருந்த காலம் போய் தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் பல பெண்கள் திரைப்படங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிக்க | 'நான் ஏன் தாலி அணிவதில்லை?' - 'குக் வித் கோமாளி' கனி சொல்லும் அதிரடி காரணம்
ஆனால் அவ்வளவு எளிதாக கதாநாயகி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காமல் இருந்த நிலையில் வாணி போஜன் , பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் நாயகிகளாக அறிமுகமாகி தங்களுக்கான பாணியை அமைத்து வைத்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் தற்போது 'சரவணன் மீனாட்சி' 'பிரிவோம் சந்திப்போம் ' ' நாச்சியார் ' ஆகிய பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்த நாயகி ரக்ஷிதா மஹாலட்சுமி கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது