செய்திகள்

பாலாஜி சக்திவேலின் ' நான் நீ நாம் ' படத்தின் முதல் பார்வை வெளியீடு

4th Aug 2021 11:06 AM

ADVERTISEMENT

சாமுராய் , காதல் , கல்லூரி , வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களைக் கொடுத்த இயக்குநர் பாலாஜி சக்திவேல் நீண்ட நாட்களாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்காமல் இருந்தார். பின் ' அசுரன் ' ' வானம் கொட்டட்டும் ' போன்ற படங்களில் நடித்து நடிப்பிலும் தன் பங்களிப்பை அளித்து வருகிறார் .

இதையும் படிக்கபிக்பாஸ் லாஷ்லியா, தர்ஷன் நடிக்கும் கூகுள் குட்டப்பா திரைப்பட முதல் பார்வை வெளியீடு

இந்நிலையில் அவருடைய புதிய படமான ' நான் நீ நாம் ' படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. வீரா , சாந்தினி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தில்  ஒளிப்பதிவாளராக சுரேஷ் குமார், இசையமைப்பாளராக ஜாவித் ரியாஸ், எடிட்டராக தீபக் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

படத்தை ப்ளூமூன் க்ரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT