செய்திகள்

வீங்கிய முகம்: தோல் மருத்துவர் மீது நடிகை ரைசா வில்சன் புகார்

19th Apr 2021 01:40 PM

ADVERTISEMENT

 

தோல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்ஸ்டகிராம்ல் தகவல் தெரிவித்துள்ளார் நடிகை ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற ரைசா வில்சன், பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். வேலையில்லா பட்டதாரி 2, தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இன்ஸ்டமிராம் தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார் ரைசா வில்சன். அதில் அவருடைய முகம் வீங்கிப் போயிருந்தது. இதுபற்றி ரைசா கூறியதாவது:

ADVERTISEMENT

முகத்துக்கு எளிமையான முறையில் ஃபேசியல் செய்ய தோல் மருத்துவரிடம் சென்றேன். அவர் எனக்குத் தேவையில்லாத சிகிச்சையை மேற்கொண்டார். இதன் விளைவாக என் முகம் வீங்கிவிட்டது. நான் தொடர்பு கொண்டபோது என்னிடம் பேச மறுத்துவிட்டார். அவர் வெளியூர் சென்றுவிட்டதாக ஊழியர்கள் தகவல் தெரிவித்தார்கள் என்றார்.

ரைசா வில்சன் பகிர்ந்த புகைப்படத்தில் அவருடைய வலதுக் கன்னம் வீங்கியிருந்தது. ரைசாவின் புகாருக்குத் தோல் மருத்துவர் இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை.

Tags : Raiza Wilson treatment dermatologist
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT