செய்திகள்

அமேசான் கேட்பதை எடுக்க வேண்டாம்: ஜோஜி படம் பற்றி லீனா மணிமேகலை

13th Apr 2021 03:34 PM

ADVERTISEMENT

 

ஃபஹத் ஃபாசில், பாபுராஜ், ஷம்மி திலகன், உன்னிமயா பிரசாத் நடிப்பில் திலீஷ் போத்தன் இயக்கியுள்ள படம் - ஜோஜி. சமீபத்தின் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

ஜோஜி படம் பற்றி கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:

ஜோஜி படத்திலிருந்து என்னை விட்டுவிடுங்கள். திலீஷ் போத்தன், ஷ்யாம் புஸ்கரண், ஃபஹத் ஃபாசில் ஆகியோரின் ரசிகரான என்னை ஜோஜி படம் முற்றிலுமாக ஏமாற்றிவிட்டது.

ADVERTISEMENT

அவசரம், பிழைகள் உள்ள திரைக்கதை (நிஜமாவே ஷ்யாம் புஸ்கரணா?), நேரடியாகக் கதை சொல்லும் முறை (தயவு செய்து திலீஷ்), ஃபஹத் ஃபாசிலின் ஒரே மாதிரியான நடிப்பு (இந்த நூற்றாண்டின் சிறந்த நடிகரிடமிருந்து தேவையான நடிப்பைப் பெறவில்லை)

தோழர்களே, கரோனாவுக்குப் பிறகும் உலகத்தின் இறுதி வரைக்கும் இந்த ஓடிடி தளங்கள் இங்குதான் இருக்கும். அவர்களுடைய தேவைக்காக நீங்கள் அழுத்தத்துக்கு ஆளாக வேண்டாம். மகேஷிண்டே பிரதிகாரம் போன்ற அற்புதமான படங்களைத் தொடர்ந்து உருவாக்குங்கள். அதற்குப் பதிலாக, அமேசான் கேட்பதை எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Tags : Fahadh Faasil Joji Leena Manimekalai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT