செய்திகள்

எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட டிராக்கியாஸ்டமி சிகிச்சையைத் தெரியப்படுத்தாதது ஏன்?: சரண் விளக்கம்

DIN

பாடகர் எஸ்.பி.பி.க்கு வழங்கப்பட்ட டிராக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தாதது ஏன் என்பதற்கு அவருடைய மகன் சரண் விளக்கம் அளித்துள்ளார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம் - செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

எஸ்.பி.பி.க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்ஜிஎம் மருத்துவக் குழுவினா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை விளக்கமளித்தனா். அதில் பங்கேற்ற எஸ்.பி. சரணிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

பாடகர் எஸ்.பி.பி.க்குத் தனியார் மருத்துவமனையில் எக்மோ, வென்டிலேட்டர் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதோடு டிராக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. டிராக்கியாஸ்டமி என்பது அறுவை சிகிச்சை முறையாகும். தொண்டையின் கீழ்ப்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு செயற்கைக் குழாய் மூலம் உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் செலுத்தப்படும். நுரையீரலில் தொற்று ஏற்படும்போது சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் இந்த முறையில் சிகிச்சை வழங்கப்படும். 

டிராக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை குறித்த தகவல்களைத் தெரியப்படுத்தாதது ஏன் என்பதற்கு சரண் பதில் அளித்ததாவது:

இந்த சிகிச்சை பற்றி வெளியே சொல்லவேண்டாம் என ஏன் முடிவெடுத்தோம் - டிராக்கியாஸ்டமி சிகிச்சை என்றால் எல்லோரும் வருகிற சந்தேகம், பேச முடியுமா என்பதுதான். நாம் சாதாரண மனிதனைப் பற்றி பேசவில்லை. எஸ்.பி.பி. பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு இதைக் கேட்டவுடன் முதலில் வருகிற சந்தேகமே, அவரால் இனி பாட முடியுமா என்பதுதான். எனக்கு ஒரு பொறுப்பு உள்ளது. நான் அடிக்கடி அப்பாவின் உடல்நிலை பற்றி தகவல் அளித்ததற்குக் காரணம், என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். டிராக்கியாஸ்டமிகூட இன்னொரு வென்டிலேட்டர்தான். அதனால் யாரும் பொய் சொல்லவில்லை. டிராக்கியாஸ்டமி பண்ணினோம் எனச் சொன்னால் மக்கள் அதிர்ச்சியடைவார்கள், கவலைப்படுவார்கள் என்பதால் சொல்ல வேண்டாம் என கோரிக்கை வைத்தேன் என்றார் சரண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT