செய்திகள்

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி: இன்று முதல் ஆரம்பம்

DIN

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாகிறது.

கோன் பனேகா குரோர்பதி என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதல் மூன்று சீஸன்கள் 2000 முதல் 2007 வரை ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 2010 முதல் சோனி டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 3-வது சீஸனை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். இதர 10 சீஸன்களின் நிகழ்ச்சிகளையும் பிரபல நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார்.

அமிதாப் பச்சன் (77), கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பினாா்.

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் மீண்டும் தொகுத்து வழங்குகிறார். 

இன்று முதல் கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சி சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். 

இந்த வருட நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. 

கோன் பனேகா குரோர்பதி சீஸன் 12 நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கடந்த மாத இறுதியிலிருந்து கலந்துகொண்டு வருகிறார் அமிதாப். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்கள், செவிலியா்கள் பிபிஇ கிட் எனப்படும் முழுப் பாதுகாப்பு கவச உடைகளைப் பயன்படுத்தி வருகிறாா்கள். கோன் பனேகா குரோர்பதி படப்பிடிப்பிலும் பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து அனைவரும் பணியாற்றி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT