செய்திகள்

தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி.க்கு நினைவில்லம்: எஸ்.பி. சரண் தகவல்

27th Sep 2020 12:44 PM

ADVERTISEMENT

திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி.க்கு நினைவில்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி. சரண் தகவல் வெளியிட்டுள்ளார். 

தனது வசீகரக் குரலால் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74. 

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். சிலர் நேரில் சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எஸ்.பி.பி.யின் மறைவு முக்கியமாக தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.பி.யின் மகனும் பாடகருமான எஸ்.பி.சரண்,

ADVERTISEMENT

எஸ்.பி.பி.க்கு தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவிடம் கட்டப்படும். இதுகுறித்து ஆலோசித்து அடுத்த ஒரு வாரத்தில் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Tags : SPB
ADVERTISEMENT
ADVERTISEMENT