செய்திகள்

வீட்டுக்குத் திரும்ப பாடகர் எஸ்.பி.பி. ஆர்வம்: மகன் சரண் தகவல்

23rd Sep 2020 02:46 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். 

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் எஸ்.பி.பிக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை பற்றி அவருடைய மகன் சரண், ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

எஸ்.பி.பி.யின் உடல் நிலை தொடர்ந்து சீரான முன்னேற்றத்தில் உள்ளது. இயன்முறை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. திரவ உணவுகளை உட்கொள்கிறார். விரைவில் குணமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

Tags : SP Balasubrahmanyam hospital
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT