செய்திகள்

அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படம்

23rd Sep 2020 05:04 PM

ADVERTISEMENT

 

கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் புதிய படம் - அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு.

ஓடிடி, யூடியூப் என இணைய உலகில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள டிரெண்ட் லவுட் நிறுவனம், முதல்முறையாகப் படத்தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளார். முதல்முறையாகக் கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார்.

2015-ல் ஷமிதாப் என்கிற ஹிந்திப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான அக்‌ஷரா - விவேகம், கடாரம் கொண்டான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அக்னிச் சிறகுகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 

ADVERTISEMENT

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு படத்தின் டீசர் நாளை வெளியிடப்படுகிறது.

Tags : female centric film
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT