செய்திகள்

மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு

20th Sep 2020 08:19 PM

ADVERTISEMENT

 

சென்னை: இயக்குநர் மிஷ்கினின் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘பிசாசு.’

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘பிசாசு-2’ என்ற பெயரில் தயாராகிறது. மிஷ்கினே இயக்கும் இந்தப் படத்தினை முருகானந்தம் தயாரிக்கிறார். நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மிஷ்கினின் கடைசித் திரைப்படமான ‘சைக்கோ’ படத்தில் வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணி இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ADVERTISEMENT

இன்று மிஷ்கினின் பிறந்தநாள் என்பதால் நள்ளிரவு மணிக்கு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படம் குறித்து மிஷ்கின் கூறுகையில், ‘“பிசாசு-2, முழுக்க முழுக்க பேய்க் கதையாக தயாராகிறது. இது சிரிப்பு பேய் அல்ல; ஆக்ரோஷமான பேய். ஒரு மலை கிராமத்தில் கதை சம்பவங்கள் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. பருவ நிலையைப் பொறுத்து முழு படப்பிடிப்பும் நீலகிரி மாவட்டம் மசனக்குடியில் நடைபெறும் முதல் பாகம் தொடர்பான சில காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் முதல் பாகத்தை விட நூறு மடங்கு அதிகமாக திகில் காட்சிகள் இடம்பெறும்.’ என்று தெரிவித்தார்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT