செய்திகள்

திரையுலகில் மீண்டும் களமிறங்கும் தயாரிப்பாளர் குஞ்சுமோன்: ஜென்டில்மேன் 2 அறிவிப்பு

11th Sep 2020 01:41 PM

ADVERTISEMENT

 

பிரபல தயாரிப்பாளரான குஞ்சுமோன், ஜென்டில்மேன் 2 படம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் - ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

இந்நிலையில் 21 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜென்டில்மேன் 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் என அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

ஹாலிவுட் தரத்துக்கு நிகராக உருவாக்கப்படும் ஜென்டில்மேன் 2 படம் முதலில் திரையரங்குகளில் தான் நேரடியாக வெளியாகும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT